மென்பொருள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் கூகுளின் மற்றும் ஒரு தயாரிப்புதான் இந்த குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Chrome OS). சென்ற ஜூலை மாதம் 7ம் தேதி தன் கூகிள் வலைமனையில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் வெளியிட இருப்பதாக கூகுள் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்தது. தற்போது இதன் பீட்டா பதிப்பு Chrome OS 0.4.220 சமிபத்தில் வெளியானது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நாவலின் (Novell Inc) சூசி ஸ்டுடியோ (SUSE Studio) கட்டமைப்பில் அமைந்துள்ளது.
கூகிள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கூகிள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவது எப்படி ?
இதனை இரண்டு முறைகளில் கம்ப்யூட்டரில் நிறுவலாம்
1. வீ.எம் வேர் டிஸ்க் பையில் (VMware virtual disk file) கொண்டு மிகவும் எளிதாக நமது கணனியில் இயக்கலாம். இதற்க்கு வீ.எம் வேர் பிளேயர் (VMware Player) இருந்தால் போதும். வீ.எம் வேர் டிஸ்க் பைலை (VMDK File) தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அதை பெரிதாக்கவும் (Unzip). பிறகு அதன் உள்ளே உள்ள இரண்டு பைல்களையும் தனியாக ஒரு போல்டரை உருவாக்கி அதற்க்கு "குரோம் ஒஎஸ்" என்று பெயரிட்டு சேமிக்கவும்.
இப்போது வீ.எம் வேர் பிளேயரை இயக்கவும் (வீ.எம் வேர் பிளேயர் இலவசமாக நிறுவிக்கொள்ள இங்கே சொடுக்குங்கள்) பிளையர் இயங்க தொடங்கியதும் உங்களிடம் உள்ள வீஎம்எக்ஸ் (.vmx) பைலை பிரவ்ஸ் செய்து தேர்வு செய்து ஓபன் பண்ணுங்கள். இப்போது குரோம் ஒஎஸ் பூட் ஆக தொடங்கும், சிறிது நேரத்தில் குரோம் ஒஎஸ் டெஸ்க்டாப் தெரியும், இனி விண்டோஸ் ஓஸ் போல் இதனையும் பயன் படுத்தலாம்.
2. இரண்டாவது முறையில் குரோம் ஒஎஸ்யை உங்கள் கணனியில் நிறுவ மேற்கண்ட வலைமனையில் இரண்டாவதாக உள்ள ஐ.எஸ்.ஒ பைலை(ISO File) தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அதனை நீரோ போன்ற டூல்கள் மூலம் காம்பக்ட் டிஸ்கில்(CD-R) பதிவு செய்து பின் கணணியை பூட் செய்து லைவ் இன்ஸ்டாலர் (Live Installer) முறையில் நிறுவ வேண்டியதுதான்.
குரோம் ஒஎஸ்சின் சிறப்பு தன்மைகள் என்ன ?
இது இணைய தளப் பயன்பாட்டை மையப்படுத்தி இது வடிவமைக்கப்படுகின்றது விண்டோஸ், லினக்ஸ் ஓ.எஸ், மேக் ஓ.எஸ் ஆகிய அனைத்தைக் காட்டிலும் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகத் தன் குரோம் ஓ.எஸ். இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதும் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்துள்ளது. இதற்கான கோடிங் குறியீடுகளை கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிடும் என தெரிகிறது.
குரோம் ஒஎஸ்சில் என்னதான் இருக்கு ?
இதில் ஸ்டார் ஆபீஸ் தொகுப்பு, கூகிள் குரோம் ப்ரோவ்சர், மெயில் க்ளையண்ட், பிளாஷ் பிளேயர், சவுண்ட் ரெகார்ட், டிக்சனரி மற்றும் பல அப்ப்ளிகேசன்கள் அடங்கியுள்ளது
நெட்வொர்க் என்று எடுத்துக்கொண்டால் ஐபி பதிப்பு ஐபி4 , ஐபி6 (IP Version 4 and 6) எல்டப் ப்ரோவ்சர், எல்டப் க்ளையண்ட், ப்ரொக்சி மற்றும் பல ...
மொத்தத்தில் குரோம் ஒஎஸ் கணணி உலகில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனபது முற்றிலும் சரியே, இதை அனைவரும் பயன்படுத்தி பார்க்கவேண்டியது மிகவும் அவசியம் என தெரிகிறது.
Wednesday, October 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
உபயோகமான பதிவு
மிக்க நன்றி ராஜா!
Thanks for the info. Please publish how to connect the wireless network in chrome OS.
உங்கள் கருத்துக்கு நன்றி சசிகுமார் சுப்பிரமணியன்.
thanks
என்னவோ தெரியல... டக்குன்னு விண்டோஸை விட மனசு வரமாட்டேங்குது.
நன்றி மகா!
/என்னவோ தெரியல... டக்குன்னு விண்டோஸை விட மனசு வரமாட்டேங்குது./
செல்வகுமார் இப்போ அப்படிதான் சொல்விங்க, கூகிள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வொர்க் பண்ணி பார்த்தல் அதன் வேகத்தில் நீங்களும் மாறிவிடுவீர்கள்.
nice info...
let them release real version... then we can analyze it.
<<<
r.selvakkumar said...
என்னவோ தெரியல... டக்குன்னு விண்டோஸை விட மனசு வரமாட்டேங்குது.
>>>
Microsoft purely user friendly operating system, event linux, unix, ,mac some of other os have such future, but not like windows, also we were learning from windows, so tough to leave it.
Some month ago, I started use linux…. But I was failed.
நன்றி மஸ்தான்!
நான் பார்த்த வரைக்கும் வின்டோஸ்க்கும் குரோம்க்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை.
அன்பு நண்பா
உங்களின் பதிவு அருமை மிக்க நன்றி ஆனால் சில நாட்களுக்கு முன்பு தினமலரின் வலையில் ஒரு பகுதி கண்டேன் கோகுல் உலக வரைபடத்தில் இந்திய பகுதிகளை இந்தியாவில் ஒரு மாதிரியும் சீனாவில் ஒரு மாதிரி பதிப்பாக வந்தது. அதை நான் சரி பார்த்த போது உண்மை அன்றிலிருந்து அதன் நிறம் மாறும் தன்மை கண்டித்து பல பதிவுகளை அனுப்பி உள்ளேன் மேலும் அதன் பிளாக்கரை பயன்படுத்தவில்லை இன்று உங்கள் பதிவை படித்து விட்டு என் நண்பன் கூறிய பிறகே நான் பார்கிறேன் மன்னிக்கவும். உங்களை போன்ற பதிவாளரை பார்க்கும் போதும் கோகுலின் பதிவுகளை மன்னித்து வரவேற்கிறேன்.
அன்பு நண்பா
உங்களின் பதிவு அருமை மிக்க நன்றி ஆனால் சில நாட்களுக்கு முன்பு தினமலரின் வலையில் ஒரு பகுதி கண்டேன் கோகுல் உலக வரைபடத்தில் இந்திய பகுதிகளை இந்தியாவில் ஒரு மாதிரியும் சீனாவில் ஒரு மாதிரி பதிப்பாக வந்தது. அதை நான் சரி பார்த்த போது உண்மை அன்றிலிருந்து அதன் நிறம் மாறும் தன்மை கண்டித்து பல பதிவுகளை அனுப்பி உள்ளேன் மேலும் அதன் பிளாக்கரை பயன்படுத்தவில்லை இன்று உங்கள் பதிவை படித்து விட்டு என் நண்பன் கூறிய பிறகே நான் பார்கிறேன் மன்னிக்கவும். உங்களை போன்ற பதிவாளரை பார்க்கும் போதும் கோகுலின் பதிவுகளை மன்னித்து வரவேற்கிறேன்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
சிறந்த தகவல்... நல்லா விளக்கம் கொடுத்து இருக்கிங்க... நன்றி!
Post a Comment