Wednesday, October 7, 2009

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் - ஒரு சிறப்பு பார்வை

மென்பொருள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் கூகுளின் மற்றும் ஒரு தயாரிப்புதான் இந்த குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Chrome OS). சென்ற ஜூலை மாதம் 7ம் தேதி தன் கூகிள் வலைமனையில் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் வெளியிட இருப்பதாக கூகுள் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்தது. தற்போது இதன் பீட்டா பதிப்பு Chrome OS 0.4.220 சமிபத்தில் வெளியானது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நாவலின் (Novell Inc) சூசி ஸ்டுடியோ (SUSE Studio) கட்டமைப்பில் அமைந்துள்ளது.

(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)


கூகிள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


கூகிள் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவது எப்படி ?

இதனை இரண்டு முறைகளில் கம்ப்யூட்டரில் நிறுவலாம்

1. வீ.எம் வேர் டிஸ்க் பையில் (VMware virtual disk file) கொண்டு மிகவும் எளிதாக நமது கணனியில் இயக்கலாம். இதற்க்கு வீ.எம் வேர் பிளேயர் (VMware Player) இருந்தால் போதும். வீ.எம் வேர் டிஸ்க் பைலை (VMDK File) தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அதை பெரிதாக்கவும் (Unzip). பிறகு அதன் உள்ளே உள்ள இரண்டு பைல்களையும் தனியாக ஒரு போல்டரை உருவாக்கி அதற்க்கு "குரோம் ஒஎஸ்" என்று பெயரிட்டு சேமிக்கவும்.

இப்போது வீ.எம் வேர் பிளேயரை இயக்கவும் (வீ.எம் வேர் பிளேயர் இலவசமாக நிறுவிக்கொள்ள இங்கே சொடுக்குங்கள்) பிளையர் இயங்க தொடங்கியதும் உங்களிடம் உள்ள வீஎம்எக்ஸ் (.vmx) பைலை பிரவ்ஸ் செய்து தேர்வு செய்து ஓபன் பண்ணுங்கள். இப்போது குரோம் ஒஎஸ் பூட் ஆக தொடங்கும், சிறிது நேரத்தில் குரோம் ஒஎஸ் டெஸ்க்டாப் தெரியும், இனி விண்டோஸ் ஓஸ் போல் இதனையும் பயன் படுத்தலாம்.2. இரண்டாவது முறையில் குரோம் ஒஎஸ்யை உங்கள் கணனியில் நிறுவ மேற்கண்ட வலைமனையில் இரண்டாவதாக உள்ள ஐ.எஸ்.ஒ பைலை(ISO File) தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு அதனை நீரோ போன்ற டூல்கள் மூலம் காம்பக்ட் டிஸ்கில்(CD-R) பதிவு செய்து பின் கணணியை பூட் செய்து லைவ் இன்ஸ்டாலர் (Live Installer) முறையில் நிறுவ வேண்டியதுதான்.

(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)


குரோம் ஒஎஸ்சின் சிறப்பு தன்மைகள் என்ன ?

இது இணைய தளப் பயன்பாட்டை மையப்படுத்தி இது வடிவமைக்கப்படுகின்றது விண்டோஸ், லினக்ஸ் ஓ.எஸ், மேக் ஓ.எஸ் ஆகிய அனைத்தைக் காட்டிலும் சிறப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகத் தன் குரோம் ஓ.எஸ். இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் முழுவதும் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்துள்ளது. இதற்கான கோடிங் குறியீடுகளை கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிடும் என தெரிகிறது.குரோம் ஒஎஸ்சில் என்னதான் இருக்கு ?

(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)


இதில் ஸ்டார் ஆபீஸ் தொகுப்பு, கூகிள் குரோம் ப்ரோவ்சர், மெயில் க்ளையண்ட், பிளாஷ் பிளேயர், சவுண்ட் ரெகார்ட், டிக்சனரி மற்றும் பல அப்ப்ளிகேசன்கள் அடங்கியுள்ளது

நெட்வொர்க் என்று எடுத்துக்கொண்டால் ஐபி பதிப்பு ஐபி4 , ஐபி6 (IP Version 4 and 6) எல்டப் ப்ரோவ்சர், எல்டப் க்ளையண்ட், ப்ரொக்சி மற்றும் பல ...


(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)


மொத்தத்தில்
குரோம் ஒஎஸ் கணணி உலகில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனபது முற்றிலும் சரியே, இதை அனைவரும் பயன்படுத்தி பார்க்கவேண்டியது மிகவும் அவசியம் என தெரிகிறது.

Tuesday, August 11, 2009

பன்றி காய்ச்சல் - ஒரு தடுப்பு நடவடிக்கை

வெளி நாடுகளில் மட்டுமே பரவி வந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் அதிலும் சென்னையிலும் வேகமாக பரவத் துவங்கி உள்ளது. பன்றி காய்ச்சல் நோய் பற்றி மக்கள் அதிகம் பீதி அடைய தேவை இல்லை.பன்றி காய்ச்சல் என்றல் என்ன ?

பன்றி காய்ச்சல் எனபது “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது இது ஒரு “ஆர் தோமைசோ வெரிடேட்” என்கின்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே ஐந்து வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.


பன்றி காய்ச்சலின் நோயின் அறிகுறிகள் என்ன ?

தொண்டையில் வலி ஏற்படுதல், மூக்கில் நீர்வடிதல், இடைவிடாத காய்ச்சல், மயக்கம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும் இம்மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்டால் அதற்கான மருந்து முறைகளை மேற்கொண்டும் குணமாகவில்லை என்றல் அதற்கு காரணம் பன்றி காய்ச்சல்தான் என்று தெரிந்துக்கொள்ளலாம்.
பன்றி காய்ச்சல்
நோய் பரவாமல் தடுப்பது எப்படி ?

1. மருத்துவமனைகளுக்கு சென்று வந்தால் ஒரு முறை குளித்து விடுவது நல்லது.

2. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் சிறிது காலங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

3. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச வேண்டாம். (அதே நேரத்தில் அவர்களிடம் வெறுப்பை காட்டாமல் அவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும்.)

4. வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாற்றம் இருந்தால் மாநகராட்சியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க சொல்லவும்.

5. இந்நோயால் பாதிக்கப்பட்டது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பன்றி காய்ச்சல் தடுப்பு மருத்துவமனைக்கு செல்லவும்.


ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது

Friday, August 7, 2009

சமுதாய சீர்கேடு பகுதி : 1

நம் நாட்டில் கிட்ட தட்ட அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் இந்த சமுதாய சீர் கேட்டில் பங்கு வகிக்கிறோம். நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோமோ அந்த அக்கறையை நாட்டை சுத்தமாக வைத்திருக்க நினைப்பதில்லை, இன்றைக்கு பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்கிறோமா என்றால் அதுவும் இல்லை, பொது இடங்களில் பேப்பர் மற்றும் பற்பல வஸ்துக்களை போட்டு நாட்டையே குப்பை தொட்டியாக்கிவிடுகிறோம். இது போன்ற சமுதாய சீர்கேடு இன்று பூங்காக்கள் முதல் கடற்கரை வரை எல்லா பொது இடங்களில் நடக்கிறது. சமிபத்தில் நான் என் அலுவலக நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கலாமென சென்றோம், தற்போது மெரினா கடற்கரையில் சாலை ஓரம் கடற்கரை நெடுக ஆங்கங்கே தரமான டைல்ஸ் முறையில்இருக்கைகளை கட்டி இருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் சமுக விரோதிகள் ஆங்கங்கே அழகுக்காக வைக்கப்பட்டுள்ள உருளையான பொருட்களையும் மேலும் சில இருக்கைகளையும் சேதம் செய்துள்ளார்கள், ஒரு சில இடங்களில் போதை வாஸ்துக்களை போட்டு உமிழ்ந்தும் வைத்துள்ளார்கள். இப்படியே நாம் போய்கிட்டு இருந்தால் வளர்ந்த நாடுகளை பார்த்து பொறாமை பட வேண்டியது தான். இன்றைய தினங்களில் வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு நாம் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளோம். இருப்பினும் சமுதாய சீர்திருத்தத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனிலும் தங்கியுள்ளது. இதைத்தான் அமெரிக்காவின் அதிபராக இருந்த திரு. ஜோன் எஃப் கென்னடி “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ நாட்டுக்கு என்ன செய்தாய்” என்று கூறினார்.

நம் சமுதாயத்தை முற்றிலும் தூய்மையான சமுதாயமாக மாற்றுவோம், வளர்ந்த நாடுகளுக்கு சவாலாக இருப்போம் என்ற நம்பிக்கையோடு இந்த என் முதல் பதிவை சமர்பிக்கிறேன்.


Monday, July 13, 2009

வலை உலா நண்பர்களுக்கு

வலை உலா நண்பர்களுக்கு வணக்கம்,

பல தமிழ் நண்பர்கள் வலைபூ தொடங்கி மிகவும் நல்ல நல்ல பதிவுகளை இட்டு வருகிறார்கள், அவர்களை பார்க்கும்போது பெருமையாகவும் சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கிறது.

நான் பல நல்ல வலைபூக்களை தவறாமல் படிப்பது என் வழக்கமாக வைத்துள்ளேன்.

ஒரு புதிய முயற்சியாக நான் இந்த வலைப்பூவை தொடங்குகிறேன் வலைபூ அன்பர்கள் நல்லாதரவு தருமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

என்றும் அன்புடன்
ராம்
Related Posts with Thumbnails