Tuesday, August 11, 2009

பன்றி காய்ச்சல் - ஒரு தடுப்பு நடவடிக்கை

வெளி நாடுகளில் மட்டுமே பரவி வந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் அதிலும் சென்னையிலும் வேகமாக பரவத் துவங்கி உள்ளது. பன்றி காய்ச்சல் நோய் பற்றி மக்கள் அதிகம் பீதி அடைய தேவை இல்லை.



பன்றி காய்ச்சல் என்றல் என்ன ?

பன்றி காய்ச்சல் எனபது “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது இது ஒரு “ஆர் தோமைசோ வெரிடேட்” என்கின்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே ஐந்து வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.


பன்றி காய்ச்சலின் நோயின் அறிகுறிகள் என்ன ?

தொண்டையில் வலி ஏற்படுதல், மூக்கில் நீர்வடிதல், இடைவிடாத காய்ச்சல், மயக்கம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும் இம்மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்டால் அதற்கான மருந்து முறைகளை மேற்கொண்டும் குணமாகவில்லை என்றல் அதற்கு காரணம் பன்றி காய்ச்சல்தான் என்று தெரிந்துக்கொள்ளலாம்.




பன்றி காய்ச்சல்
நோய் பரவாமல் தடுப்பது எப்படி ?

1. மருத்துவமனைகளுக்கு சென்று வந்தால் ஒரு முறை குளித்து விடுவது நல்லது.

2. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் சிறிது காலங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

3. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச வேண்டாம். (அதே நேரத்தில் அவர்களிடம் வெறுப்பை காட்டாமல் அவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும்.)

4. வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாற்றம் இருந்தால் மாநகராட்சியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க சொல்லவும்.

5. இந்நோயால் பாதிக்கப்பட்டது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பன்றி காய்ச்சல் தடுப்பு மருத்துவமனைக்கு செல்லவும்.


ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது

8 comments:

வல்லிசிம்ஹன் said...

thanks for the information.

RamGP said...

மிக்க நன்றி! வல்லிசிம்ஹன் அவர்களே!

தேடல் தொடக்கம் .......... said...

that's nice information
use ful for all

RamGP said...

நன்றி ராஜேஷ் !


குவைத்ல பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா?

தேவன் மாயம் said...

நல்லா எழுதியிருக்கிறீர்கள் நண்பரே!!!

தேவன் மாயம் said...

முடிந்தால் என் இடுகைகளையும் பார்க்கவும்!!
பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! http://abidheva.blogspot.com/2009/08/2.html

RamGP said...

மிக்க நன்றி டாக்டர்! உங்கள் பதிவு மிகவும் அருமை. மேலும் இநோய் பற்றி அறிய

இதையும் பாருங்கள்: பன்றி காய்ச்சல் சில கேள்விகள் பதிலுடன்.

Anonymous said...

பன்றி காய்ச்சல் நோய் எச்சில் மூலமாக கூட எளிதில் பரவுவதால் பஸ் கண்டக்டரிடம் எச்சில் தடவாமல் டிக்கெட் கொடுக்குமாறு கேட்டு வாங்குங்கள்.

Related Posts with Thumbnails
SocialTwist Tell-a-Friend