நம் நாட்டில் கிட்ட தட்ட அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் இந்த சமுதாய சீர் கேட்டில் பங்கு வகிக்கிறோம். நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோமோ அந்த அக்கறையை நாட்டை சுத்தமாக வைத்திருக்க நினைப்பதில்லை, இன்றைக்கு பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்கிறோமா என்றால் அதுவும் இல்லை, பொது இடங்களில் பேப்பர் மற்றும் பற்பல வஸ்துக்களை போட்டு நாட்டையே குப்பை தொட்டியாக்கிவிடுகிறோம். இது போன்ற சமுதாய சீர்கேடு இன்று பூங்காக்கள் முதல் கடற்கரை வரை எல்லா பொது இடங்களில் நடக்கிறது. சமிபத்தில் நான் என் அலுவலக நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கலாமென சென்றோம், தற்போது மெரினா கடற்கரையில் சாலை ஓரம் கடற்கரை நெடுக ஆங்கங்கே தரமான டைல்ஸ் முறையில்இருக்கைகளை கட்டி இருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் சமுக விரோதிகள் ஆங்கங்கே அழகுக்காக வைக்கப்பட்டுள்ள உருளையான பொருட்களையும் மேலும் சில இருக்கைகளையும் சேதம் செய்துள்ளார்கள், ஒரு சில இடங்களில் போதை வாஸ்துக்களை போட்டு உமிழ்ந்தும் வைத்துள்ளார்கள். இப்படியே நாம் போய்கிட்டு இருந்தால் வளர்ந்த நாடுகளை பார்த்து பொறாமை பட வேண்டியது தான். இன்றைய தினங்களில் வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு நாம் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளோம். இருப்பினும் சமுதாய சீர்திருத்தத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனிலும் தங்கியுள்ளது. இதைத்தான் அமெரிக்காவின் அதிபராக இருந்த திரு. ஜோன் எஃப் கென்னடி “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ நாட்டுக்கு என்ன செய்தாய்” என்று கூறினார்.
நம் சமுதாயத்தை முற்றிலும் தூய்மையான சமுதாயமாக மாற்றுவோம், வளர்ந்த நாடுகளுக்கு சவாலாக இருப்போம் என்ற நம்பிக்கையோடு இந்த என் முதல் பதிவை சமர்பிக்கிறேன்.
4 comments:
அன்பு நண்பா இப்பகுதியை பார்த்து செய்வது அரியாமல் திகைத்து போனேன் இதை விட உங்களின் சமுதாய பார்வைக்கு என்னால் ஒரு வீரவணக்கம் மட்டுமே எனும் போது மனதால் மயங்குகிறேன்
இப்படிக்கு
க.கனகுராஜேஷ் mcom.,pgdca.,htit.,dmps.,
wataniya in govt kuwait
என் அன்புள்ள நண்பர் ராம், உங்களுடைய சமுதாயத்தின் மீது உள்ள அக்கறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் இந்த சமுதாய சீர்திருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன். இந்த பதிவு மிகவும் நன்றாக அமைந்துள்ளது.
கோகுல் B.Tech.,M.B.A, சென்னை
ராஜேஷ் & கோகுல் நன்றி, தொடர்ந்து என் பதிவுகளை படிச்சிட்டு வாங்க.
அன்பு நண்பர் ராம், உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துகள்
Post a Comment